திருச்செங்கோடு
திருச்செங்கோடு அருகே புளியங்காடு பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புளியங்காடு செல்வராஜ் என்பவர் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் அவர் நாட்டுத்துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்தார். இதையடுத்து போலீசார் செல்வராஜ் மீது வழக்குப்பதிந்து கைது செய்து திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 8 லிட்டர்சாராயம் மற்றும் நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.