வைக்கோல் போர் எரிந்து சேதம்

வைக்கோல் போர் எரிந்து சேதம்

Update: 2023-06-29 18:45 GMT

விருத்தாசலம்

மங்கலம்பேட்டையை அடுத்த பிஞ்சனுார் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன்(வயது38). இவரது வீட்டின் தோட்டத்தில் இருந்த வைக்கோல் போர் நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்