எந்திரம் மூலம் தாளடி அறுவடை பணி மும்முரம்

எந்திரம் மூலம் தாளடி அறுவடை பணி மும்முரம்

Update: 2023-02-23 18:45 GMT

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 45,682 ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்திருந்தனர். தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையிலிருந்து முன் கூட்டியே சாகுபடிக்கு தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் சிலர் முன்கூட்டியே குறுவை சாகுபடியை செய்து அறுவடை செய்தனர். சம்பா சாகுபடியை முன்கூட்டியே தொடங்கிய விவசாயிகள் சிலர் அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தனர். தாமதமாக சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்த விவசாயிகள் ஏராளமானோர் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் சாய்ந்து மழைநீரில் மூழ்கியது. சிலருக்கு நெல்மணிகள் முளைத்து விட்டது. பலர் மழை நீரை வடிய வைத்து அறுவடை செய்தனர். இந்தநிலையில் நீடாமங்கலம் பகுதியில் எந்திரம் மூலம் தாளடி அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்