என் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்- கமல்ஹாசன்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகரும், சேப்பாக் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46 வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்,
சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவரும், எங்கள் ராஜ் கமல் நிறுவனத்தின் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.