தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

திருமருகல் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-03 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல்அருகே கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜேஷ் (வயது 32).சமையல் கூலி தொழிலாளி.இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்