தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Update: 2022-09-08 19:52 GMT

திருவையாறு

திருவையாறை அடுத்த திருப்பழனத்தை சேர்ந்தவர் முரளி (வயது45). இவரது மனைவி சரிதா (30). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முரளியின் மகன் நிஷாந்த் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த முரளி நேற்றுமுன்தினம் செம்மங்குடி செல்லும் சாலையில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருவையாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரிதா திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்