மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டுவில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-21 19:00 GMT

வத்தலக்குண்டுவில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஒன்றிய தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு ஆணைப்படி தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்று கோஷிமிட்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்