அரையாண்டு தேர்வு

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மற்ற வகுப்புகளுக்கு 19-ந்தேதி ஆரம்பமாகிறது.

Update: 2022-12-14 18:43 GMT

அரையாண்டு தேர்வு

தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் இத்தேர்வுக்கு அனைத்துவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அந்தந்த பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வானது பொதுத்தேர்வை போல நடைபெறும்.

காலையில் 9.45 மணி முதல் பகல் 1 மணி வரை பிளஸ்-2 மாணவர்களுக்கும், மதியம் 1.45 முதல் மாலை 5 மணி வரை பிளஸ்-1 மாணவர்களுக்கும் தேர்வு நடைபெறும். முதல்நாளான இன்று தமிழ் தேர்வு நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) ஆங்கிலமும், 19-ந் தேதி முதல் பிற பாடங்களுக்கும் தேர்வு நடைபெறும். வருகிற 23-ந் தேதி இத்தேர்வு முடிவடைகிறது.

10-ம் வகுப்பு

இதேபோல 10-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கி 23-ந் தேதி முடிவடைகிறது. மேலும் 8, 9-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வும், 6, 7-ம் வகுப்புகளுக்கு 2-ம் பருவ தேர்வுகளும் அன்றைய தினம் தொடங்குகிறது.

பிற வகுப்புகளுக்கும் தேர்வுகள் தொடங்கி வருகிற 23-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் அரையாண்டு தேர்வு விடுமுறை வருகிற 24-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை இருக்கும் எனக்கூறப்படுகிறது. விடுமுறை முடிந்து ஜனவரி மாதம் 2-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என பள்ளி வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்