தூத்துக்குடியில்ஜிப்சம் அட்டை திருடியவர் கைது
தூத்துக்குடியில்ஜிப்சம் அட்டை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்துக்கு சொந்தமான குடோனில் ஜிப்சம் அட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இதில் இருந்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 1000 அட்டைகளை மர்மநபர் திருடிசென்று விட்டார்.
இது குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தங்கமாரியப்பன் (வயது 42 கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் மடத்தூர் நடுத்தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் பொன் செல்வம் (45) ஜிப்சம் அட்டைகளை திருடியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் பொன்செல்வத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஜிப்சம் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.