குட்கா விற்ற கடைக்கு 'சீல்'
ஊட்டியில் குட்கா விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் ஊட்டி பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் நேற்று சோதனை செய்தனர். அப்போது பஸ் நிலையம் எதிரில் இருந்த பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பெட்டிக்கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி முழுவதும் கடைகளில் திடீர் சோதனை நடத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக பொருட்கள் ஏதாவது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.