குன்னம் சார்நிலை கருவூலம் இடமாற்றம்
குன்னம் சார்நிலை கருவூலம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது-
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த குன்னம் சார்நிலை கருவூலம் சென்னை கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையரின் அனுமதியின்படி, கீழ்காணும் வாடகை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கதவு எண்.302, கே.ஜி.எஸ். கட்டிடம், அரியலூர் மெயின் ரோடு, குன்னம், பெரம்பலூர் மாவட்டம்-621708 என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பணம் பெறும் அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலகத்தில் தங்களது கருவூலம் குறித்த பணி தொடர்பான விவரங்களுக்கு மேற்கண்ட விலாசத்தில் உள்ள உதவி கருவூல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.