தமிழகத்தில் நாளை குரூப் 1 முதல் நிலைத்தேர்வு - 92 பணியிடங்களை நிரப்ப திட்டம்

மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில் கொள்குறி வகையில் வினாக்கள் அமைய உள்ளது.;

Update:2022-11-18 18:22 IST

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) சார்பில் குரூப் 1 முதல் நிலைத்தேர்வு நாளை நடைபெறுகிறது. இதற்காக 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுத உள்ளனர்.

மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில் கொள்குறி வகையில் வினாக்கள் (Objective type questions) அமைய உள்ளது. இந்த தேர்வின் மூலம் 18 துணை கலெக்டர், 26 காவல் துணை கண்காணிப்பாளர், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்ளிட்ட 92 இடங்களை நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்