ரூ.1.78 கோடியில் நகர்ப்புற ஊரமைப்பு அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

பாவூர்சத்திரத்தில் ரூ.1.78 கோடியில் நகர்ப்புற ஊரமைப்பு அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2023-05-04 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் ரூ.1 கோடியே 78 லட்சத்தில் மாவட்ட நகர்ப்புற ஊரமைப்பு அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பழனி நாடார் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் ஆகியோர் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தனர். விழாவில் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் கீழப்பாவூர் காவேரி, தென்காசி ஷேக் அப்துல்லா, யூனியன் துணைத்தலைவர் முத்துக்குமார், நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனர் அனுஜா, உதவி செயற்பொறியாளர்கள் அனிதா, உதயகுமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, ரவிசங்கர், திவான்ஒலி, பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், பஞ்சாயத்து துணைத்தலைவர் குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்