குளக்கரைகளில் சாம்பல் நிற இருவாச்சி பறவைகள்

குளக்கரைகளில் சாம்பல் நிற இருவாச்சி பறவைகள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Update: 2022-09-03 14:13 GMT

கோவை

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் அரிய வகை இருவாச்சி பறவைகள் உள்ளன.

இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் மற்றும் உக்கடம் பெரியகுளக்கரையில் உள்ள மரங்களில் 70-க்கும் மேற்பட்ட சாம்பல் நிற இருவாச்சி பறவைகள் தென்படுகிறது. இதனால் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து பறவை ஆர்வலர்கள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலையில் இந்தியன் கிரேட் ஹார்ன்பில் (பெரிய கருப்பு வெள்ளை இருவாச்சி பறவை), மலபார் வைடு ஹார்ன்பில் (கருப்பு வெள்ளை இருவாச்சி பறவை), இந்தியன் கிரே ஹார்ன்பில் (சாம்பல் நிற இருவாச்சி), மலபார் கிரே ஹார்ன்பில் (மலபார் சாம்பல் நிற இருவாச்சி) ஆகிய 4 வகையான இருவாச்சி பறவைகள் உள்ளன.

தற்போது உக்கடம், சிங்காநல்லூர் குளக்கரையில் சாம்பல் நிற இருவாச்சி பறவைகள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பறவைகளை துரத்துவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்