50 சதவீத மானியத்தில் உளுந்து விதை

தியாகதுருகம் வேளாண்அலுவலகத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை அதிகாரி தகவல்

Update: 2023-01-26 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர் சந்துரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தியாகதுருகம் ஒன்றியத்தில் சம்பா பருவத்தில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது சம்பா நெல் அறுவடை தொடங்கி உள்ள நிலையில் அறுவடைக்கு பின் தரிசு நிலங்களில் பயறு வகைப்பயிர்களின் விதைப்பை ஊக்கப்படுத்தும் வகையில் பயறு வகைகள் சாகுபடி செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு உளுந்து விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும். அதன்படி தியாகதுருகம் ஒன்றிய பகுதிக்கு சுமார் 2,500 ஏக்கர் உளுந்து பயிர் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உளுந்து விதைகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் உள்ளது. எனவே சம்பா நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். மேலும் 90 நாட்கள் வயதுடைய உளுந்து பயிரை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதலாக வருமானம் ஈட்டலாம். எனவே தேவைப்படும் விவசாயிகள் உளுந்து விதைகளை மானிய விலையில் வாங்கி பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்