காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம்

காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது.

Update: 2023-10-02 19:15 GMT

காந்தி ஜெயந்தி

மானாமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மாங்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா தலைமையில் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருணா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன் தீர்மானங்களை வாசித்தார். மானாமதுரை அருகே செய்களத்தூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ஜானகி சுப்ரமணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி பங்கேற்று பேசினார். இதில், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் லூயிஸ் ஜோசப் பிரகாஷ், அங்கையர்கண்ணி, மானாமதுரை யூனியன் சேர்மன் லதா அண்ணாதுரை, துணை தலைவர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ராஜாமணி, தி.மு.க. நிர்வாகி பாலகிருஷ்ணன், ஊராட்சி துணை தலைவர் பாக்கியலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, ஊராட்சி செயலர் பாஸ்கரன், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கிராமசபை கூட்டம்

காரைக்குடி அருகே தி.சூரக்குடி ஊராட்சி சொக்கம்பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் முருகப்பன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆறு.முத்துலெட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் பவதாரணி வரவேற்றார். இதில், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி அலுவலர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர். கல்லல் ஊராட்சி ஒன்றியம் பொய்யலூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் திவ்ய நாதன் தலைமை தாங்கினார். துணை தலைவி ராதிகா சந்தானம் முன்னிலை வகித்தார். இதில், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், பாடத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உமா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜோசப் நன்றி கூறினார்.

திருப்புவனம்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 45 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டங்கள் நடந்தன.

யூனியன் ஆணையாளர் ஜோதிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் கிராமசபை கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்