திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் 2,200 பேருக்கு பட்டம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் 2,200 பேருக்கு பட்டத்தை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

Update: 2022-06-22 17:05 GMT


திருவெண்ணெய்நல்லூர், 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். உயர்கல்வித் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன், ரவிக்குமார் எம்.பி., மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சபாபதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் நாகலட்சுமி வரவேற்றார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு 2013 -2020 வரையில் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற 2,200 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, அரசின் கல்வி திட்டங்கள் குறித்து பேசினார்.

இதில் புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், கல்லூரிகள் கல்வியியல் இணை இயக்குனர் காவேரி அம்மாள், பதிவாளர் விஜயராகவன், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம்கணேசன், ஒன்றிய குழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ், பேரூராட்சி துணை தலைவர் ஜோதி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்