அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Update: 2023-05-28 10:09 GMT

பல்லடம்,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் முதலாம் மாநில பிரதிநிதித்துவ பேரவை வரவேற்பு குழு கூட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார்.இதில் மாநில தலைவர் தமிழ்செல்வி, திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பல்லடம், உடுமலை, தாராபுரம், மடத்துக்குளம், அவினாசி வட்டார நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் கூறுகையில் ''அரசு புதிதாக காலை உணவு திட்டம் என அறிவித்துவிட்டு அதை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றாமல் தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடுகிறது. சத்துணவு திட்டத்தில் மதிய உணவிற்கு வழங்கப்பட்டு வரும் தொகையை விட அதிகமாக காலை உணவு திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளது. தொடர்ச்சியான எங்கள் கோரிக்கைக்கு தீர்வு காண தொடர் போராட்டமே தீர்வு தரும் என நாங்கள் நம்புகிறோம். ஏற்கனவே 2 தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளோம். வரும் ஆகஸ்டு 12,13-ந்தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து மாநில பேரவை கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து விவாதித்து அறிவிக்க உள்ளோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்