அரசு பள்ளியில் மாறுவேட போட்டி

அரசு பள்ளியில் மாறுவேட போட்டி நடந்தது.

Update: 2022-09-05 18:15 GMT

தாந்தோன்றி ஒன்றியம் துளசிகொடும்பு அரசு தொடக்க பள்ளியில் நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கான மாறுவேட போட்டி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை வனிதா தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் செல்வராணி வரவேற்று பேசினார். இதில் மாணவ-மாணவிகள் தேச தலைவர்களின் வேடங்களில் வந்து கலந்து கொண்டனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் ஆசிரியர் பயிற்றுனர் மஞ்சுளா பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சத்துணவு அமைப்பாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்