கொரோனா காலத்தில் சேவையாற்றிய டாக்டர்களுக்கு அரசு பணி வாய்ப்பு - வைகோ வேண்டுகோள்

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவி லட்சக்கணக்கான மனித உயிர்களை காவு வங்கியது.

Update: 2023-07-29 03:22 GMT

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உலகம் முழுவதும் 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை கொரோனா பெருந்தொற்று பரவி லட்சக்கணக்கான மனித உயிர்களை காவு வங்கியது. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு டாக்டர்கள் தங்களது இன்னுயிரை பொருட்படுத்தாமல் மருத்துவ சேவையாற்றினார்கள்.

கொரோனா காலத்தில் பணியாற்றிய டாக்டர்கள் குறைந்தபட்சம் 100 நாட்கள் பணியாற்றினாலே அவர்களுக்கு நிரந்தர பணி வழங்கலாம் என மத்திய அரசின் மருத்துவத்துறை 2021ம் ஆண்டு மே 3-ந்தேதி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் கடந்த ஆட்சியில் இந்த டாக்டர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்காமல் தற்காலிகமாக பணி வழங்கியதால் இன்று ஆயிரக்கணக்கான டாக்டர்கள் வேலை இழந்துள்ளனர்.

கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி தற்போது பணி வாய்ப்பு இல்லாமலும், தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான டாக்டர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கி அரசு பணிவாய்ப்பு வழங்கிடுமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்