முத்தூர் அருகே நிற்காமல் சென்றதால் அரசு பஸ்சை கிராம பொதுமக்கள் சிறைபிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்தூர் அருகே நிற்காமல் சென்றதால் அரசு பஸ்சை கிராம பொதுமக்கள் சிறைபிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்தூர்
முத்தூர் அருகே நிற்காமல் சென்றதால் அரசு பஸ்சை கிராம பொதுமக்கள் சிறைபிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பஸ்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சங்ககிரி, ஈரோடு, அரச்சலூர், நத்தக்காடையூர், காங்கயம், தாராபுரம் வழியாக பழனிக்கு 2 அரசு பஸ்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எடப்பாடியில் இருந்து பழனி செல்வதற்கு நேற்று அதிகாலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது.இந்த பஸ் நத்தக்காடையூர் அருகே உள்ள செங்குளம்-பழையகோட்டை பஸ் நிறுத்தத்திற்கு நேற்று காலை 8.10 மணிக்கு வந்தது. அப்போது அங்கு பஸ்சுக்காக காத்து நின்ற பயணிகள் சிலர் பஸ்சை நிறுத்துவதற்கு கை காட்டினார்கள். ஆனால் அந்த பஸ் நிற்காமல் சென்று விட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நத்தக்காடையூர் கடைவீதிக்கு விரைந்து வந்து அரசு பஸ்சை சிறை பிடித்தனர். பின்னர் அந்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோரிடம் கிராம பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த அரசு பஸ்சில் வந்த காங்கயம், தாராபுரம், பழனி செல்வதற்கு சென்ற பயணிகள், அதற்கு பின்னால் வந்த தனியார் பஸ்சில் ஏறி சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த காங்கயம் போலீசார், அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனடியாக பொதுமக்களிடம் செல்போனில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் உறுதி
இதன் முடிவில் செங்குளம்- பழையகோட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து கிராம பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.