கவர்னர் அரசியல் பேசக்கூடாது, தனது கடமையை மட்டுமே செய்ய வேண்டும்: அண்ணாமலை பேட்டி
கவர்னர் அரசியல் பேசக்கூடாது, கவர்னர் அரசை விமர்சிப்பது மரபு அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதவது:-
"தமிழக ஆளுநர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தால் என்னை விட மகிழ்ச்சியான ஆள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. திமுகவின் வண்டவாளம், தண்டவாளம் வெளியே வரும். ஆனால் சந்திக்கக்கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு. காரணம் என்னவென்றால், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது.
ஆளுநர் நேர்மையான முறையில் விமர்சிக்கவேண்டியது சட்டசபையில்தான். சட்டசபையில் விமர்சித்துக் கொள்ளலாம். ஆளுநர் என்பவர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கலாம். ஆனால் ஆளுநர் தினம் தினம் என்னை போல சந்தித்து பேட்டி கொடுத்தால், அந்த பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்திப்பது குறித்த கேள்விக்கு அண்ணாமலை இவ்வாறு பேசியுள்ளார்.