மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும் என கவர்னர் உரையில் அறிவிப்பு

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கியது.

Update: 2023-01-09 04:43 GMT

சென்னை,

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்கியது. சட்டமன்ற வளாகத்தில் ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கியது.

சட்டப்பேரவையில் தமிழில் உரையை தொடங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி

அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறி கவர்னர் ஆர்.என்.ரவி பேசத்தொடங்கினார். சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

கவர்னர் ரவியின் உரையை எதிர்த்து கூட்டணி கட்சிகள் கூச்சல் எழுப்பினர், அமளியில் ஈடுபட்டனர். கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். கவர்னரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க ஈபிஎஸ், ஓபிஎஸ் வருகை தந்தனர்.

Live Updates
2023-01-09 05:19 GMT

தமிழக அரசின் நலத்திட்டங்களை விளக்கி சட்டப்பேரவையில் ஆர்.என்.ரவி உரையாற்றினார் அவை வருமாறு:-

*புயலையும், வடகிழக்கு பருவ மழையையும் தமிழக அரசு சிறப்பாக கையாண்டது

* பருவமழையையும், புயலையும் சிறப்பாக கையாண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

* இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது

* தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* தொழிற்துரையின தற்கால தேவைக்கேற்ப ஐடிஐ-களில் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

* பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

* வளர்ந்த நாடுகளை போல தமிழகத்திலும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* நீட் தேர்வு விலக்கு மசோதா ஜனாதிபதியிடம் உள்ளது.

* பரந்தூரில் விமான நிலையம் அமைவது தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்

* 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

* செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு வெற்றிக்கரமாக நடத்தி முடித்து உள்ளது.

* புத்தொழில் திட்டத்தில் ரூ30 கோடியை பட்டியிலன மக்களுக்கு ஒதுக்கி இருப்பது மிகச்சிறந்த முன்னெடுப்பு

* வளர்ந்ந்த நாடுகளை போல தமிழகத்திலும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை தேவை.

* காலை உணவு திட்டத்தால் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர்.

* தமிழகத்தின் 3-வது தகவல் தொழில்நுட்ப பூங்கா மதுரையில் ரூ.600 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.

* ரூ.15,000 கோடி செலவில் குடிநீர் வினியோயகத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

* பெரியார் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 149 சமத்துவபுரங்களை புதுப்பிக்க ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும் என கவர்னர் உரையில் அறிவிப்பை வெளியிட்டார்.

* 500 மின்சார பஸ்கள் வாங்கப்படும்.

* கீழடி அருங்காட்சியகம் போன்று பொருநை அருங்காட்சியகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

* பெண்களின் முன்னேற்றத்திற்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* "42,845 சுய உதவிக்குழுக்கள் நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது"

* புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு வேலைவாய்ப்பு அதிகரிப்பு

* சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது

* 10% இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது என அரசு கருதுகிறது.

* கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

* மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

* மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும் என கவர்னர் உரையில் அறிவிப்பை வெளியிட்டார்.

* வாழிய தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என தனது உரையை நிறைவு செய்தார் கவர்னர் ஆர்.என். ரவி

கவர்னர் ஆர்.என். ரவி ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை, சபாநாயகர் அப்பாவு தமிழில் கூறினார்.

2023-01-09 05:13 GMT

சட்டப்பேரவையில் உரையில் உள்ள தமிழ்நாடு என்ற வார்த்தையை அப்படியே வாசித்தார் கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதே சரி என அண்மையில் கவர்னர் கூறியிருந்தது சர்ச்சையை எற்படுத்தியிருந்தது. 

2023-01-09 04:56 GMT

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் தராதை கண்டித்து பதாகை ஏந்தி பாமக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2023-01-09 04:55 GMT

கவர்னர் ரவிக்கு எதிராக சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ், இடதுசாரிகள், விசக,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். எங்கள் நாடு தமிழ்நாடு கவர்னர் ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் அவையில் முழக்கமிட்டனர்.

2023-01-09 04:53 GMT

கவர்னரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்.ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம்;

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பா.ம.க எம்.எல்.ஏ.க்கள், கவர்னர் முன்பாக கையில் பேப்பரில் ஆங்கிலத்தில் எழுதி வைத்து உயர்த்திப் பிடித்தவாறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

2023-01-09 04:51 GMT

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது.சட்டப்பேரவையில் கடும் அமளிக்கு மத்தியில் தமிழில் உரையை தொடங்கி நிகழ்த்திவருகிறார்.சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து உள்ளனர்.

2023-01-09 04:46 GMT

சட்டப்பேரவையில் கடும் அமளிக்கு மத்தியில் தமிழில் உரையை தொடங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கினார்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தமிழில் வாழ்த்து கூறினார் கவர்னர் ஆர்.என்.ரவி. தொடர்ந்து பேசிய அவர்

தமிழக சகோதர - சகோதரிகளுக்கு வணக்கம் 

Tags:    

மேலும் செய்திகள்