மாணவிகள் விடுதியில் அரசு மானியத்தில் தோட்டம்

விழுப்புரம் மாணவிகள் விடுதியில் அரசு மானியத்தில் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-17 18:45 GMT

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் அரசு மானியத்தில் தோட்டம் அமைக்க கோலியனூர் ஒன்றியத்தில் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவிகள் விடுதியில் 10 செண்ட் இடத்தில் அரசு மானியத்தில் தோட்டம் அமைக்கப்பட்டது. அதில் கல்லூரி மாணவிகள், விடுதி காலியிடத்தில் உழவு செய்து நாற்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் செந்தில் தலைமை தாங்கினார். கோலியனூர் ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குனர் வெங்கடேசன், அரசு மானியத்துடன் கூடிய தோட்டம் அமைப்பதை தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி விடுதி காப்பாளர் பெமினா செல்வி, உதவி பேராசிரியர்கள் ஞானமூர்த்தி, ரீகன் மற்றும் மாணவிகள் பலர் கலந்துகொண்டு மூலிகை செடிகள், தோட்டப்பயிர்களுக்கான விதைகளை நட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்