பாலக்கோடு அரசு பெண்கள் பள்ளியில் குழந்தைகள் தின விழா

Update: 2022-11-14 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி தலைமை தாங்கினார்.

உதவி தலைமை ஆசிரியர் சங்கர் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் 3 இடங்களை பிடித்த, 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 162 மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் விழாவையொட்டி அனைத்து மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்