பெருஞ்சாணியில்அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெருஞ்சாணியில்அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-11 18:53 GMT

குலசேகரம்:

அரசு ரப்பர் கழக மணலோடை கோட்டத்தில் தொழிலாளர்களின் பணிமூப்பு பட்டியல் 2014-ம் ஆண்டு இறுதிபடுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது ரப்பர் கழக நிர்வாகம் இந்த பட்டியலை விருப்பு, வெறுப்பு அடிப்படையில் திருத்தம் செய்துள்ளதாகவும், இதனால் உண்மையான பணி மூப்பு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி பெருஞ்சாணியில் உள்ள கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் ஒருங்கிணைப்பாளர் ஜெஸ்டின் தலைமை தாங்கினார். போராட்டத்தை சி.ஐ.டி.யூ. தோட்டம் தொழிலாளர் சங்க உதவித் தலைவர் ஏ. வேலப்பன் தொடங்கி வைத்தார். தொழிலாளர்கள் லாரன்ஸ், சசிகுமார், மகாதேவர் ஆகியோர் உரையாற்றினர். முடிவில் சங்க தலைவர் பி.நடராஜன் நிறைவுரையாற்றினார். இதில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்