அரசு விரைவு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு விரைவு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-21 18:45 GMT

நாகர்கோவில்:

அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிரந்தர தன்மை கொண்ட தொழில்களில் நிரந்தர ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதை தடுக்கும் அரசாணை 322-ஐ ரத்து செய்ய வேண்டும். தேவையான ஊழியர்களை பணிக்கு அமர்த்த வலியுறுத்தியும், ஒப்பந்தப்படி பண பலன்களை வழங்க கோரியும், வார விடுப்பு மறுப்பதை கண்டித்தும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் பணிமனை தோறும் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பகவதியப்பன் தலைமை தாங்கினார். மத்திய சங்க உதவித் தலைவர் ஜான் ராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மார்த்தாண்டம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பணிமனை தலைவர் துரைப்பழம் தலைமை தாங்கினார். பணிமனைச் செயலாளர் சிவகுமார், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் ஸ்டீபன், மத்திய சங்க நிர்வாகி யேசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சங்க துணை பொதுச் செயலாளர் டென்னிஸ் ஆண்டனி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கிளைத்தலைவர் முருகேசன் ஆகியோர் பேசினர். சி.ஐ.டியு. மாவட்ட துணைத் தலைவர் பொன்.சோபனராஜ் முடித்து வைத்து உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்