அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-30 19:07 GMT

அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் சி.ஐ.டி.யு. நெல்லை வண்ணார்பேட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று மாலையில் காதில் பூவை சுற்றியும், கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுப்பது போலவும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க சி.ஐ.டி.யு. துணைப் பொதுச் செயலாளர் சுதர்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் அன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டை வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேசி முடிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஓய்வு பெற்ற நல அமைப்பு நிர்வாகி வடிவேல், விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க பணிமனை செயலாளர் சரவணகுமார், மத்திய சங்க உதவித்தலைவர் அருண், கிருபாகரன் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை வண்ணார்பேட்டை பொது மேலாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தலைவர் காமராஜ், சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் பெருமாள், அரசு போக்குவரத்து மண்டல பொதுச்செயலாளர் ஜோதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்