அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

Update: 2023-10-09 18:58 GMT

புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு அரசு டாக்டர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் டாக்டர் பெரியசாமி தலைமை தாங்கினார். தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் மகப்பேறு டாக்டர்களின் பணியிடங்கள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். கூடுதல் மகப்பேறு டாக்டர்கள் உடனடியாக பணியமர்த்தப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற உள்ளதாகவும், வருகிற 16-ந் தேதி தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் மகப்பேறு பிரிவில் அவசரமில்லா அனைத்து அறுவை சிகிச்சைகளும் நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்