அரசு கல்லூரி ஆண்டு விழா

பூம்புகார் அரசு கல்லூரி ஆண்டு விழா நடந்தது

Update: 2022-06-21 17:01 GMT
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அரசினர் கல்லூரி 58-வது ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருமான மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அறிவொளி வரவேற்றார். விழாவில், நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அதனைத்தொடர்ந்து மாலை விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டிகளை சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தொடங்கி வைத்தார். இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிகுமார், புஷ்பவல்லி ராஜா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்துமகேந்திரன், அறநிலையத்துறை ஆய்வாளர் பத்ரி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







Tags:    

மேலும் செய்திகள்