ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த ஆட்டுப்பாக்கம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இக்கல்லூரியில் சுமார் 1,500 பேர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு அரக்கோணத்திலிருந்து தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பஸ் இ?க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலையில் கல்லூரியிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டுப்பாக்கம் காந்திபூங்கா அருகில் பஸ் சென்றபோது படியில் தொங்கிகொண்டிருந்த மாணவர்களை, கண்டக்டர் உள்ளே வருமாறு கூறியுள்ளார்.
இதனால் மாணவர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள் சிலர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். சம்பவம் குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணாடி உடைக்கப்பட்டதை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.