மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் கோவிலில் மாடுகளுக்கு கோபூஜை

மாட்டுப்பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் கோவிலில் மாடுகளுக்கு கோபூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-01-16 18:45 GMT

மாட்டுப்பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் கோவிலில் மாடுகளுக்கு கோபூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாடுகளுக்கு கோபூஜை

மயிலாடுதுறை காவிரி வடகரையில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான வதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேர்ந்து விடப்பட்ட 30-க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பராமரிக்கப்படும் மாடுகளுக்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் பண்டிகையையொட்டி கோபூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று மாட்டுப்பொங்கல் பண்டிகையையொட்டி வதாரண்யேஸ்வரர் கோவிலில் மாடுகளுக்கு கோபூஜைநடந்தது. இதை முன்னிட்டு மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகாகணபதி, கோலட்சுமி யாகம் நடைபெற்றது.

அபிஷேகங்கள்

இதனைத் தொடர்ந்து பசுமாட்டிற்கு லட்சுமி பூஜை செய்யப்பட்டது. பின்னர் பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த பூஜைகளை பாலச்சந்திர சிவாச்சாரியார் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவெண்காடு

மாட்டுப்பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது மாடுகளை அதிகாலையிலேயே குளிப்பாட்டி, சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவைகளை பூசி மலர் மாலை அணிவித்து சர்க்கரைப் பொங்கல் படையல் இட்டு வழிபட்டனர்.

மேலும் பசுவுடன் கூடிய கன்று உள்ள வீடுகளில் கோ பூஜை செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மாடுகளை வண்டியில் பூட்டி ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்