தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி - அ.தி.மு.க. தீர்மானம்

அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று கூடியது.

Update: 2024-08-16 06:49 GMT

சென்னை,

அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று கூடியது.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செயற்குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில், தி.மு.க. அரசு, மத்திய அரசை கண்டித்து தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளன.  தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி மலரச்செய்வோம் எனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் , மின் கட்டண உயர்வை திரும்ப பெறவும் , நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காத தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் , மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை அறிவிக்காதது, நிதி ஒதுக்காததை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்