தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.;
சென்னை,
தங்கம் விலை உயருவதும், பிறகு குறைவதுமான நிலை கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது. இதில் பெரும்பாலான நாட்கள் விலை அதிகரித்தபடியேதான் காணப்படுகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு தங்கம் எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.87,000-க்கு விற்கப்படுகிறது.