தங்கம் விலை சற்று குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.;
சென்னை,
தங்கம் விலை ஒரு நாள் உயர்வதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6,790-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.