ஓடும் பஸ்களில் 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு

ஓடும் பஸ்களில் 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-28 19:24 GMT

லால்குடியை அடுத்த வாளாடி செம்பழுனி கள்ளத்தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி பாப்பா (வயது 60). இவர் செங்கரையூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு அரசு பஸ்சில் சென்றார்.பஸ் கொப்பாவளி என்ற இடத்தில் வந்தபோது, தற்செயலாக தனது கழுத்தை பார்த்துள்ளார். அப்போது, அவர் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் பறித்து சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் லால்குடியை அடுத்த மாந்துறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரான்சிஸ் மனைவி ஆரோக்கிய மேரி (55). இவர் நேற்று காலை மாந்துறையில் இருந்து லால்குடிக்கு பஸ்சில் சென்றார். அப்போது, ஓடு்ம் பஸ்சில் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்