வீரபாண்டியில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி திருட்டு
வீரபாண்டியில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குச்சனூர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 62). சம்பவத்தன்று இவர், வீரபாண்டி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அவர் அங்கு அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அப்போது நேர்த்திக்கடன் செலுத்தும் தொட்டி அருகே சென்றபோது அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதையடுத்து அவர் அந்த பகுதியில் கீழே விழுந்து கிடக்கிறதா என்று தேடினார். ஆனால் சங்கிலி கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் வீரபாண்டி போலீசில் புகாா் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றது தெரியவந்தது.