கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

கிருஷ்ணகிரியில் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-06-02 15:53 GMT

கிருஷ்ணகிரி:

நகை பறிப்பு

கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 57). இவர் கடந்த மே 31-ந் தேதி இரவு தன் வீட்டு அருகே உள்ள கோவிலுக்கு ஸ்கூட்டியில் சென்றார். பிறகு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அந்த நேரம் பின்னால் வேகமாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி கூச்சலிட்டார். அதற்குள் நகை பறிப்பு கொள்ளையர்கள். நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கலைச்செல்வி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி விசாரணை நடத்தினார். கொள்ளையர்களுக்கு 20 முதல் 25 வயதிற்குள் இருக்கும் என கூறப்படுகிறது. இருந்தாலும் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நகை பறிப்பு சம்பவம் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்