கோபி சிறையில் அடைக்கப்பட்ட கைதி உடல்நலக்குறைவால் சாவு

கோபி சிறையில் அடைக்கப்பட்ட கைதி உடல்நலக்குறைவால் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-16 20:43 GMT

டி.என்.பாளையம்

கோபி சிறையில் அடைக்கப்பட்ட கைதி உடல்நலக்குறைவால் பரிதாபமாக இறந்தார்.

கைதி

டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள விளாங்கோம்பை கிராம பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). கூலித்தொழிலாளி.

இவர் உள்பட 7 பேரை யானை தந்தம் கடத்திய வழக்கில் கடந்த மாதம் 16-ந் தேதி டி.என்.பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் குமார் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

சாவு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமார் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் கடந்த 12-ந் தேதி கோவையில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

அதன்பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குமார் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார்.

இறந்த குமாருக்கு மணியாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்