பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் வாரச்சந்தையில் 5 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பைனை...!

வடமதுரை அருகே அய்யலூர் வாரச்சந்தையில் 5 மணி நேரத்தில் 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

Update: 2022-07-07 04:29 GMT

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இந்த சந்தையில் அதிகாலை 4 மணி முதல் களைகட்டி இருக்கும்.

சந்தைக்கு ஆடு கோழி மற்றும் விவசாய பகுதியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் கொண்டு வந்து விற்பனைக்கு ஏலதாரர்களும், வெளி மாவட்ட விவசாயிகளும் வியாபாரிகளும் கலந்து கொள்வார்கள்.

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சந்தை தொடங்கி 5 மணி நேரத்திற்குள் சுமார் ரூ. 2 கோடி வர்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில் 15 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.16 முதல் 30 ஆயிரம் வரை விற்பனையானது. பக்ரீத் பண்டிகை எதிரொலியாக செம்மறி ஆடுகளுக்கு அதிக லாபம் கிடைத்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்