வடலூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி வடலூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-01-14 18:45 GMT

வடலூர், 

வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று வாரச்சந்தை நடைபெற்றது. பொங்கல் பண்டிகையையொட்டி வாரச்சந்தை நடைபெற்றதால், அதிகளவில் ஆடுகள் விற்பனையானது. கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் வருகை தந்து, ஆடுகளை போட்டிபோட்டு வாங்கி சென்றனர். இதில் ஒரு ஆடு குறைந்தபட்சம் 4 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 8 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆடுகள் விற்பனையாகி இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதற்கு முன்பு சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், பாப்பாகுடி, மீன்சுருட்டி ஆகிய கிராமங்களில் இருந்து விவசாயிகளும் இங்கு ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். ஆனால், அந்த பகுதியில் தற்போது வாரச்சந்தை நடைபெறுவதால், அவர்கள் இங்கு வருவதில்லை. எனவே தற்போது வடலூர் வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்தும் குறைந்து காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்