ஆடுகளை திருடிய 2 பேர் கைது

பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று ஆடுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-02 20:21 GMT

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று ஆடுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆடுகள் திருட்டு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செண்டாங்காடு மேலத்தெருவைச் சேர்ந்தவர் மாரிசாமி (வயது60). அவருக்கு சொந்தமான ஆடுகளை வீட்டிற்கு அருகில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். சம்பவத்தன்று இரவு 2 பேர் ஆட்டுக்கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டு இருந்த ஆடுகளைத் திருடி மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்து சென்றனர். சத்தம் கேட்டு கண்விழித்த மாரிசாமி ஆட்டுக் கொட்டகைக்கு ஓடிச் சென்று பார்த்தார். அப்போது 2 பேர் ஆடுகளை மோட்டாா் சைக்கிளில் திருடி சென்றது தெரியவந்தது.

2 பேர் கைது

அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் ஆடுகளை திருடி சென்றவர்களை சுற்றி வளைத்து மோட்டார் சைக்கிளுடன் பிடித்தனர். பின்னர் அவர்கள் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் செண்டாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் செல்வகுமார்(வயது34), திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் அருள்பிரகாசம்(28) என்பதும் இவர்கள் ஆடு திருடுவதற்காகவே பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து செல்வகுமார், அருள்பிரகாசம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்