தேனி அருகே மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி

தேனி அருகே மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி நடைபெற்றது.

Update: 2022-10-12 17:29 GMT

தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் நடந்தன.

போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், ரோஷி வித்யாலயா பள்ளி முதல்வர் பாரத ரத்னம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி செயலாளர் கண்ணன், இணைச்செயலாளர்கள் விஜய், கார்த்திகேயன், பள்ளி முதல்வர் சாம்பவி, துணை முதல்வர் முத்துச்செல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வயது வாரியாக 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்