செஞ்சி பஸ் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றம்

ரூ.6¾ கோடியில் விரிவாக்கப்பணிக்காக செஞ்சி பஸ் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

Update: 2022-06-09 17:47 GMT

செஞ்சி:

செஞ்சி காந்தி கடைவீதியில் உள்ள பஸ் நிலையம் ரூ.6 கோடியே 74 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக பஸ் நிலையத்தின் ஒருபகுதியில் உள்ள கடைகள் இடிக்கப்பட உள்ளன. எனவே பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பழனி தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், செயல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் செஞ்சி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பகுதி கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்ட இருப்பதால் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் செஞ்சி பஸ் நிலையத்தை திண்டிவனம் சாலையில் உள்ள புறவழிச்சாலை பகுதிக்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, முருகன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்