புதிய நிர்வாகிகள் தேர்வுக்காக பொதுத்தேர்தல்
புதிய நிர்வாகிகள் தேர்வுக்காக பொதுத்தேர்தல்
நாகூர் முஸ்லிம் ஜமாத் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் வருகிற 23-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாகூர் முஸ்லிம் சங்க ஹமீதிய்யா மஹாலில் நடைபெறுகிறது. நாகூர் சரகத்திற்குட்பட்ட 18 வயது நிரம்பிய அனைத்து ஆண் முஸ்லிம் வாக்காளர்களும் வாக்களித்து நிர்வாகிகளை தேர்வு செய்ய உள்ளனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. வருகிற 10-ந்தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஜமாத் தலைமை தேர்தல் அலுவலர் சாதிக் செய்து வருகிறார்.