சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருட சேவை உற்சவம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருட சேவை உற்சவம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் ஆனி சுவாதியையொட்டி கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தோசிதப்பெருமாளுக்கு அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருள செய்யப்பட்டது.
பெரியாழ்வார் வெள்ளை யானை வாகனத்தில் முன்னே செல்ல பக்தோசித பெருமாள் தங்க கருட வாகனத்தில் மங்களவாத்தியங்களுடன் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது மாட வீதிகளில் வீடுதோறும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தனர். இதில் சோளிங்கர் மற்றும் சுற்றியுள்ள பத்திற்க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.