கிருஷ்ணன் கோவிலில் கருட சேவை

அம்பை கிருஷ்ணன் கோவிலில் கருட சேவை நடைபெற்றது

Update: 2022-06-08 21:09 GMT

அம்பை:

அம்பை ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ண சுவாமி கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி- அம்பாள், அனுமன் வாகனம், ஆதி சேஷ வாகனம் போன்ற வாகனங்களில் ஒவ்வொரு நாளும் எழுந்தருளினர். 5-ம் நாளன்று கிருஷ்ணசுவாமி, லட்சுமி நாராயண பெருமாள், தென்னழகர் அழகர்சாமி, புருஷோத்தபெருமாள், நவநீத கிருஷ்ணசாமி ஆகிய 5 சுவாமிகளும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து யானை வாகனம், குதிரை வாகனங்களில் எழுந்தருளிவைகாசி விசாகத்தன்று தீர்த்தவாரி அபிஷேகங்களும், இரவில் சுவாமி- அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்