ஒரு ஆண்டில் ரூ.1¼ கோடி குப்பை வரி வசூல்

சிவகாசி மாநகராட்சி பகுதியில் ஒரு ஆண்டில் ரூ.1¼ கோடி குப்பை வரி வசூல் செய்யப்பட்டது.

Update: 2023-06-25 19:52 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 48 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஆண்டுதோறும் குப்பை வரி வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2022 ஏப்ரல் மாதம் முதல் 2023 மார்ச் மாதம் வரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து ரூ.71 லட்சத்து 76 ஆயிரமும், தொழிற்சாலைகளில் இருந்து ரூ.9 லட்சத்து 17 ஆயிரமும், வணிகநிறுவனங்களில் இருந்து ரூ.45 லட்சத்து 35 ஆயிரமும் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.1 கோடியே 26 லட்சத்து 28 ஆயிரம் கிடைத்துள்ளது. ஆனாலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதியில் குப்பைகள் மலைபோல் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது. இதனை தவிர்க்க மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய வேலை ஆட்களை நியமித்து தொய்வில்லாமல் பணிகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்