மழைநீர் கால்வாயில் குப்பைகளை அகற்ற வேண்டும்
மழைநீர் கால்வாயில் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் வுட் காக் சாலையில் மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் செல்லும் கால்வாய், தற்போது குப்பை தொட்டியாக மாறி உள்ளது. அப்பகுதியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் போது, குப்பைகளை வழங்காமல், கால்வாயில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் கால்வாயில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.