ரூ.1 லட்சம் மதிப்புள்ள குப்பை சேகரிக்கும் வாகனங்கள்

வாணாபுரம் ஊராட்சிக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள குப்பை சேகரிக்கும் வாகனங்களை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்

Update: 2023-01-03 12:25 GMT

வாணாபுரம்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வாணாபுரம் கிராமம்.

இங்கு வடக்கு தெரு, தெற்கு தெரு, பள்ளிக்கூட தெரு, கோவில் வீதி, கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

சுற்றுவட்டார பகுதியில் மைய பகுதியாக விளங்கும் இங்கு பள்ளி மாணவ, மாணவிகள் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அன்றாடம் வந்து செல்கின்றனர்.

இப்பகுதியில் அதிகளவில் குப்பைகள் மற்றும் கழிவுகள் ஆங்காங்கே வீசப்படுகிறது. பொதுமக்கள் அளிக்கும் குப்பைகளை தூய்மை காவலர்கள் மூலம் சேகரித்து தரம் பிரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குப்பைகளை சேகரிக்கும் வாகனம் சேதமான நிலைமையில் இருந்து வந்ததால் அதற்காக புதிய குப்பைகளை சேகரிக்க வாகனம் வேண்டும் என்று கூறியதையடுத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 4 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் தயார் செய்யப்பட்டு அதனை ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் தூய்மை காவலர்களிடம் வழங்கினார்.

அப்போது ஊராட்சி செயலாளர் செல்வம், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள், தூய்மை காவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்